மே 04 - இந்த நாளில் என்னென்ன சிறப்பு?...பஞ்சாங்க பலன்கள் இதோ!

Aadmika
May 04, 2023,09:17 AM IST

இன்று மே 04, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 21

சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்

மதுரை கள்ளழகர் எதிர்சேவை, அக்னி நட்சத்திரம் ஆரம்பம்


இரவு 11.58 வரை சதுர்த்தசி திதி, அதற்கு பிறகு பெளர்ணமி திதி உள்ளது. இரவு 09.43 வரை சித்திரை நட்சத்திரம், பிறகு சுவாதி நட்சத்திரம் உள்ளது. இரவு 09.43 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


காது குத்துவதற்கு, சங்கீதம் கற்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, மருந்து உண்ணுவதற்கு ஏற்ற நாள்.


இன்று யாரை வழிபட வேண்டும் ?


இன்று கள்ளழகர் கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபட சுபிட்சம் உண்டாகும்.