ஏப்ரல் 06 - இன்று எந்தெந்த நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாள் ?
Apr 06, 2023,09:27 AM IST
இன்று ஏப்ரல் 06 வியாழக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 23
பெரிய வியாழன், தேய்பிறை, சமநோக்கு நாள்
காலை 10.58 வரை பெளர்ணமி, பிறகு பிரதமை திதி உள்ளது. பிற்பகல் 01.24 வரை அஸ்தம் நட்சத்திரமும் பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.09 வரை மரணயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்ய ஏற்ற நாள் ?
விதை விதைப்பதற்கு, செல்ல பிராணிகள் வாங்குவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு, தங்க நகைகள் வாங்குவதற்கு சிறந்த நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும் ?
குரு பகவானை வழிபட நன்மைகள் ஏற்படும்.