ஏப்ரல் 04 - இன்று நன்மைகள் பெருக என்ன செய்ய வேண்டும்?

Aadmika
Apr 04, 2023,09:47 AM IST

இன்று ஏப்ரல் 04 செவ்வாய்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 21

மகாவீர் ஜெயந்தி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 09.08 வரை திரியோதசி, பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. காலை 10.28 வரை பூரம், பிறகு உத்திரம் நட்சத்திரம். காலை 10.28 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


எதற்கெல்லாம் நல்ல நாள்?


சிலைகளை வடிவமைப்பதற்கு, செடி, கொடி மரம் நடுவதற்கு சிறந்த நாள், அபிஷேகம் செய்வதற்கு, நாட்டிய பயிற்சி மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் .


யாரை வழிபட வேண்டும்?


நரசிம்மரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். பங்குனி மாத வளர்பிறை செவ்வாய் கிழமை என்பதனால் முருகப் பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.