ஏப்ரல் 03 - இன்றைய நாளில் என்னென்ன சிறப்புக்கள் இருக்கு ?

Aadmika
Apr 03, 2023,09:34 AM IST

இன்று ஏப்ரல் 03 திங்கட்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 20

பிரதோஷம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 07.32 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி உள்ளது. காலை 08.20 வரை மகம் நட்சத்திரம் பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 08.20 வரை  மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 5 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள்?


சுரங்கம் அமைப்பதற்கு, கிழங்கு வகைகள் பயிரிடுவதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு, நவகிரக சாந்தி செய்வதற்கு நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று பங்குனி மாத வளர்பிறையில் வரும் சோமவார பிரதோஷம். இன்று சிவ பெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.