ஏப்ரல் 22 - இன்று நாள் எப்படி?...பஞ்சாங்கம் என்ன சொல்கிறது ?
இன்று ஏப்ரல் 22, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 09
ரம்ஜான் பண்டிகை, அட்சய திருதியை, கிருத்திகை, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 09.17 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 12.10 வரை பரணி நட்சத்திரமும் பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
இன்று என்ன செய்யலாம் ?
கடன் அடைப்பதற்கு, தங்கம் போன்ற மங்கல பொருட்கள் வாங்குவதற்கு, தற்காப்பு கலைகள் பயில்வதற்கு, மந்திர ஜபம் துவங்குவதற்கு, புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்குவதற்கு, சுரங்கம் வெட்டுவதற்கு, பழைய வாகனங்களை மாற்றுவதற்கு, யாகம் செய்வதற்கு, தானம் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சித்திரை மாத கிருத்திகை என்பதனால் முருகப் பெருமானை வழிபடுவதால் எண்ணத் தெளிவு ஏற்படும். பெருமாளையும், லட்சுமி குபேரரையும் வழிபட செல்வ வளம் பெருகும்.