ஏப்ரல் 21 - இன்றைய நாளில் என்னென்ன நல்ல காரியங்கள் செய்யலாம் ?

Aadmika
Apr 21, 2023,09:07 AM IST

இன்று ஏப்ரல் 21, 2023 வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு சித்திரை 08

சந்திர தரிசனம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 09.38 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. அதிகாலை 12.02 வரை அஸ்வினி நட்சத்திரமும் பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது.  அதிகாலை 12.02 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 2 முதல் 3 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


இன்று என்ன நல்ல காரியங்கள் செய்யலாம் ?


பொன், பொருட்கள் வாங்குவதற்கு, தானியம் சேமிப்பதற்கு, புதிய அடுப்பு அமைக்க, நீர் நிலை சாதனங்களை சோதனை செய்ய, தான தர்மங்கள் செய்வதற்கு, அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ள ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


மகாலட்சுமியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் துன்பங்கள் நீங்கி, நன்மைகள் பெருகும்.