ஏப்ரல் 10 - இன்று எந்த நேரத்தில் என்ன செய்யலாம் ?
இன்று ஏப்ரல் 10 திங்கட்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 27
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்
காலை 08.36 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி உள்ளது. பிற்பகல் 01.27 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.06 வரை மரணயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
உழவு பணி செய்வதற்கு, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள, அபிஷேகம் செய்வதற்கு, நீர்நிலைகள் சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும் ?
இன்று நாள், திதி, நட்சத்திரம் ஆகியவற்றை கணக்கிட்டு பார்த்தால் இது ராகு பகவானுக்குரிய நாளாகும். அதனால் சிவ பெருமானையும், விநாயகப் பெருமானையும் வழிபட வாழ்வில் நன்மைகள் சேரும். இன்று பஞ்சமி திதியும் உள்ளதால் வாராஹியை வழிபட கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.