வேலையை விட்டு நீக்கி.. 600 ஊழியர்களின் வாழ்க்கையில் கசப்பை கொடுத்த.. ஆப்பிள்!
கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்கள் 600 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. முன்னதாக தனது கார் மற்றும் ஸ்மார்ட்வாரட்ச் டிஸ்பிளே தயாரிப்புத் திட்டத்தைக் கைவிட்ட நிலையில் தற்போது லேஆப் நடவடிக்கையில் ஆப்பிள் இறங்கியுள்ளது.
நீக்கப்பட்ட ஊழியர்களில் 85 பேர் ஐபோன் ஸ்கிரீன் திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வந்தவர்கள். மற்றவர்கள் கார் திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வந்தவர்கள். கார் தயாரிப்புத் திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் கைவிட்டதைத் தொடர்ந்து இவர்களுக்கும் வேலை போய் விட்டது.
கடந்த பிப்ரவரி மாதம்தான் கார் திட்டம் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளே திட்டங்களை அறிவித்தது ஆப்பிள் நிறுவனம். தற்போது இதை நிறுத்தி விட்டது. ஊழியர்களையும் வேலையை விட்டு அனுப்பியுள்ளது. கார் திட்டத்துக்கான செலவீனங்கள் கவலை அளிக்கும் வகையில் இருந்ததாலும், சரியான திட்டமிடல் இல்லாததாலும் அதைக் கைவிட்டு விட்டது ஆப்பிள் நிறுவனம்.
ஆப்பிள் நிறுவனத்தால் வேலையை விட்டு நீக்கப்பட்டவர்களில் 371 பேர் சான்டாகிளாராவில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர்கள் ஆவர்.
கடந்த ஆண்டு பல ஆயிரம் பேரை முன்னணி நிறுவனங்கள் சரமாரியாக வேலையை விட்டு நீக்கின. இந்த ஆண்டும் இது தொடர்கதையாக நீடித்து வருகிறது. லே ஆப்பை நடத்தி வரும் நிறுவனங்களின் வரிசையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.