அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுன் வீட்டில்.. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி ரெய்டு!
Feb 25, 2025,10:43 AM IST
சென்னை: கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான அம்மன் அர்ஜுன் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவை சேர்ந்தவர் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்கனவே வழக்கு பதிந்திருந்தனர்.
இதனையடுத்து, இன்று அதிகாலை திடீரென அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுன் வீட்டில் டிஎஸ்பி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபடுகிறதா என்ற விபரம் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.