ஹாட்டான சென்னையில்.. ஏசி மின்சார ரயில்கள்.. ஏப்ரல் முதல் பயன்பாட்டுக்கு வரும்.. தெற்கு ரயில்வே
சென்னை: சென்னையில் ஏப்ரல் முதல் வாரத்தில் ஏசி மின்சார ரயில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகையின் அதிகரிப்பால் ரயில் சேவைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மெட்ரோ ரயில் சேவை, புறநகர் ரயில் சேவைகளை மக்கள் பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னை புறநகர் ரயில் சேவைகள் பயணிகளின் வசதிக்கு பெரும்பங்காற்றி வருகிறது.
அதன்படி ஏற்கனவே சென்னை பீச் டூ தாம்பரம் செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வழித்தடங்களில் தனித்தனியான ஏசி மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம் சென்னை பீச் டூ செங்கல்பட்டு, தாம்பரம் டூ சென்னை பீச் என இரண்டு சேவைகளில் கூடுதலாக 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இச்செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.