ஏப்ரல் 27  - இந்த நாளில் என்ன விசேஷம் ?

Aadmika
Apr 27, 2023,09:15 AM IST


இன்று ஏப்ரல் 27, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 14

வளர்பிறை சுபமுகூர்த்த தினம், சம நோக்கு நாள்


பிற்பகல் 02.46 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 08.02 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 05.59 வரை சித்தயோகமும் பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 7.30 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


சாஸ்திரம் கற்பதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு, வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு, சங்கீதம் கற்பதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


அண்ணாமலையாரை வழிபட வாழ்வில் உயர்வு ஏற்படும்.