2024 ஜூன் 4 க்கு பிறகு.. அதிமுக.. தினகரன் கையில் வரும்.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

Manjula Devi
Apr 13, 2024,05:11 PM IST

தேனி: தேனியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பேசும்போது, 2024 ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அதிமுக டிடிவி தினகரன் கையில் வரும் என பாஜக மாநில தலைவர் 

அண்ணாமலை பரபரப்பான பேசியுள்ளார்.


லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று தேனி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் இறங்கினார். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:




அதிமுக உடனான கூட்டணியில் இருந்து விலகி டிடிவி தினகரன் கூட்டணியில் இணைந்துள்ளோம் .

தமிழ்நாட்டில் 2019 இல் திமுகவும், அதிமுகவும் சிட்டிங் போட்டாங்க. அதனாலதான் அவர்களுக்கு எந்த இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. 2024 இல் நமக்குத் தெரியும். அண்ணன் டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் அண்ணன் ஸ்டாலின் இன்று முதல்வராக இருந்திருக்க முடியாது. அப்படி இருந்தாலும் கூட மக்கள் செல்வாக்கு டிடிவி தினகரன் அவர்களுக்கே இருப்பதால் அதிமுகலிருந்து வெளியேற்றப்பட்டார். அதனால்தான் உறுதியாக நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். 2024 ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அதிமுக உண்மையான தலைவன் டிடிவி தினகரன் கையில் வரும். இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற தேனி தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்க உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். 


அடுத்த ஆறு நாட்களில்  எல்லாத்தையும் பார்த்து குக்கர் சின்னத்துக்கு ஓட்டு போடணும். தமிழ்நாட்டில் பாத்தீங்கன்னா தமிழ்நாடு முழுவதும் பிரஷர் ல இருக்கு. ஊழல் பிரஷர், குடும்ப ஆட்சி பிரஷர், தமிழ்நாடு உரிமைகளை விட்டுக் கொடுத்த பிரஷர், அண்ணனுடைய இந்த குக்கர் தான் இந்த பிரஷரையும் எல்லாம் வெளியேற்ற போகுது என பரபரப்பாக பேசினார் அண்ணாமலை.