திருப்பாவை பாசுரம் 28 - கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
Jan 13, 2024,10:34 AM IST
திருப்பாவை பாசுரம் 28 :
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
பொருள் :
குறை ஏதும் இல்லாத கோவிந்தனே, நாங்கள் கறவை மாடுகளின் பின்னால் சென்று அவற்றிற்கு தேவையானவற்றை கவனித்து, மேய்ச்சல் செய்து வாழ்பவர்கள். அந்த மாடுகள் தரும் பாலை வைத்து உணவு சமைத்து உண்பவர்கள். ஆயர்குல பெண்களானவ எங்களுக்கு உலக அறிவு ஏதும் கிடையாது. ஆனாலும் தலைவனாகிய உன்னை துதித்து, பாடிய பிறகு இந்த பிறவியில் நாங்கள் பிறந்த பலனை அடைந்து விட்டோம். இனி எங்களுக்கு நிச்சயமாக வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பதை மட்டும் நாங்கள் அறிவோம். உன் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக உனக்கும் எங்களுக்கும் ஒரு உறவு ஏற்பட்டு விட்டது. இதை யாராலும் அழித்து விட முடியாது. அந்த உறவின் உரிமை மிகுதியால் அறியாத பிள்ளைகளான நாங்கள் உன்னை ஒருமையில் அழைத்து பேசி இருப்போம். அதற்காக எங்கள் மீது கோபம் கொள்ளாதே. எங்களின் பிழைகளை பொறுத்து, எங்களுக்கு உன்னுடைய அருளை தர வேண்டும் இறைவனே.
விளக்கம் :