பரவாயில்லை.. விஜய் அரசியல் திமுகவைச் சார்ந்ததாக இருந்தால்.. அண்ணாமலை பரபரப்பு கருத்து!

Meenakshi
Jul 04, 2024,08:33 PM IST

திருச்சி: ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் கருத்தாக விஜய்யின் கருத்தை வரவேற்கின்றேன். நீட் விவகாரத்தில் திமுக எடுத்துள்ள கொள்கை முடிவை சார்ந்து விஜய் தன்னுடைய அரசியலில் பயணிப்பார் என்றால் தமிழ்நாட்டில் பாஜக மட்டும் தனித்து நிற்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


திருச்சியில் திருமண விழா ஒன்றில் அண்ணாமலை இன்று கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நீட் குறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அண்ணாமலை அளித்த பதில்: 




இன்றைக்கு சாயந்திரம் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள்  அனைவரும் பாமக வேட்பாளர்  அன்புமணியை ஆதரித்து விக்கிரவாண்டியில் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.  நாளை பாஜக சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பை எலெக்ஷன் என்று சொன்னாலே ஆளும் கட்சியினுடைய அத்துமீறல் அதிகமாக இருக்கும். பைலக்சன்னாலே  அப்படித்தான். 


கிட்டத்தட்ட இந்தியாவில் 90% ஆளுங்கட்சியின் அதிகாரம் அதிகமாக இருக்கும். இப்பவே கிட்டத்தட்ட 9 அமைச்சர்கள் அங்கு இருக்கிறார்கள். திமுக கட்சியினரிடமிருந்து பறக்கும் படையினர் வேட்டி சேலைகளை கைப்பற்றியுள்ளனர். இடைத்தேர்தல் நியமான முறையில் நடக்க வேண்டும்.


விஜய் சொன்ன கருத்துக்கு அண்ணாமலை பதில்


கருத்து சொல்வது அவரவர் சுதந்திரம். அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். நீட் விவகாரத்தில் திமுக எடுத்துள்ள கொள்கை முடிவை சார்ந்து விஜய் தன்னுடைய அரசியலில் பயணிப்பார் என்றால் தமிழ்நாட்டில் பாஜக மட்டும் தனித்து நிற்கும். பாஜக கூட்டணியில் உள்ள பாமகவிற்கும் நீட் குறித்து மாற்று கருத்து உண்டு. ஆரோக்கியமான அரசியலில் எல்லா கருத்துக்களும் இருக்கும். 


நீட்டிற்கு பாஜக வலிமையான ஆதரவு அளிக்கும். ஆதாரத்தின் அடிப்படையில் நீட்டிற்கு சப்போர்ட் பண்ணுகிறோம். நீட் தேர்வு யாருக்கும் எதிரானது இல்லை. போன ஆண்டை விட அதிகமான மாணவர்கள் அரசு பள்ளிகளில் இருந்து அரசு கல்லூரிகளுக்கு போகிறார்கள். இந்தியாவில் எல்லா இடத்திலும் நீட்டை ஏற்றுக்கொண்டார்கள். பாரதிய ஜனதா கட்சியை காரணம் காட்டி அனைவரும் நீட்டை எதிர்க்கின்றனர். மம்தா பானர்ஜி நீட்டை எதிர்க்கிறார். ஆனால் 2016, 2017ம் ஆண்டுகளில் அவர் நீட்டை எதிர்க்க வில்லையே.




நாங்கள் தெளிவாக இருக்கிறோம். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். இந்தியாவின் அரசியல் அமைப்பு என்னவாக இருக்கின்றது. 2021க்கு முன்னாடி ஒன்றிய என்ற வார்த்தை வந்ததா? ஆனாலும் இன்று விஜய் அவர்களும் கூட திமுக சார்ந்த அரசியலை கை எடுக்கிறார். மோஸ்ட் வெல்கம். நோ ப்ராப்ளம். திமுக சார்ந்த அரசியலை கையில் எடுத்தால் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனித்து இருக்கும். எங்களுக்கு அது சந்தோஷம்.


எங்களுடைய இடத்தில் நாங்கள் விளையாட போகிறோம். விஜய் அவர்களும் திமுக சார்ந்த அரசியலில் போகிறார். போகட்டும். திமுகவும் அங்கேயே இருக்கட்டும். அதிமுகவும் அங்கேயே இருக்கட்டும். எங்களுடைய அரசியல் இன்னும் எளிமையாகி விட்டது. பாரதிய ஜனதா அரசியல் மட்டும் தனித்து இருக்கும். எங்களுக்கும் இது சந்தோஷம் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.