Friday Motivation: இந்தப் பாட்டியைப்  பார்த்தீங்களா.. எப்படி "கூட்டுது"ன்னு".. செமல்ல!

Meenakshi
Oct 06, 2023,12:23 PM IST

சென்னை:  காலையில் ஒரு வீடியோவில் கண் விழிக்க நேரிட்டது.. பார்த்த வேகத்திலேயே அடடா சூப்பரப்பு என்று கை தட்ட வைத்து விட்டது அதில் வந்த காட்சி.


மேட்டர் இதுதான்.. வாங்க படிப்போம்!


இன்றைய நவீன உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அன்றைய காலம் போன்று இன்று இல்லை. முன்னர் வீட்டு வேலை செய்ய பெண்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தனர். ஆனால் இன்று நிலைமை வேறாக உள்ளது. அன்று பெண்கள் வேலைக்கு செல்லாமல் குழந்தைகளையும் வீட்டையும் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது. 




ஆண்களுக்கு சமமாக உழைக்க ஆரம்பித்து விட்டனர்.  இன்றைய பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி என இருவரின் சம்பாத்தியமும் தேவையாகி விட்டது. பெண்களும் சேர்ந்து உழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதன் காரணமாக வீட்டு வேலைகளை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதினால் நவீன கருவிகளின் பயன்பாடு தேவைப்படுகிறது. 


வீட்டு வேலை செய்வதற்கு பல சாதனங்கள் இன்று வந்துவிட்டன. ஆட்டுக்கல் ஒழிந்து கிரைண்டர் வந்து விட்டது.. கிணற்றடியில் இடுப்பு ஒடிய துவைத்த கஷ்டம் போய்.. வாசிங் மிஷின் வந்து விட்டது.. சட்னி அரைக்க பயன்பட்ட அம்மி அழிந்து இன்று மிக்சி வந்தாச்சு.. இப்படியே மைக்ரோ ஒவன் அது இதுன்னு பல சாதனங்களுடன் பாத்திரம் விளக்கக் கூட மிஷின் வந்துருச்சுங்க.


இந்த டெக்னாலஜி வளர்ச்சியினால் நேரம் மிச்சமாவதுடன், வேலையும் சுலபமாக விரைந்து முடிக்க முடிகிறது. இப்படிப்பட்ட ஒரு டெக்னாலஜியைத்தான் இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. ஒரு பாட்டியம்மா வீட்டு வாசலை  கூட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் கூட்டும் ஸ்டைல்தான் செம.. அதாவது ஒரு குட்டி வீல் பொருத்தப்பட்ட வண்டியில் அமர்ந்து மின்னல் வேகத்தில் அங்குமிங்கும் போய் போய் கூட்டி வருகிறார். 


இது எந்த ஊர் என்று தெயவில்லை... "ஆத்தா" பேரும் தெரியவில்லை... வீடியோ எடுத்தது "தாத்தா"வான்னும் புரியலை.. ஆனால் பார்க்க சூப்பரா இருக்கு.. இதைப் பார்த்தபோது நமக்கு மனசுக்கு ஒன்னு தோணுச்சு.. இதே மாதிரி.. கிச்சன் துடைக்கிறது.. காய்கறி நறுக்குவது, வெங்காயம் உரிக்கிறது.. இப்படி எல்லா வேலைகளுக்கும் சட்டுப்புட்டுன்னு ஒரு மெஷினைக் கண்டுபிடிச்சுக் கொடுத்தாங்கன்னா எவ்வளவு நல்லாருக்கும்.. அப்படியே.. கோலம் போடறதுக்கும் ஒரு சொலூஷன் கண்டுபிடிங்கப்பா.. !


எல்லாத்துக்கும் மெஷின் வந்திருச்சுன்னா.. பேசாம இதை ஆம்பளைங்க கிட்ட ஹேன்ட் ஓவர் பண்ணிட்டு கிச்சன்ல இருந்து விடுதலை கிடைக்கும்ல!