உலகின் நீளமான நாக்கு .. கின்னஸ் சாதனை படைத்த.. அமெரிக்க பெண்..!
வாஷிங்டன்: உலகின் மிக நீளமான நாக்கை கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் கலிபோர்னியாவை சேர்ந்த சேனல் டேப்பர்.
உலகின் மிக குள்ளமான பெண், நீளமான பெண், குண்டான பெண், என பல்வேறு சாதனைகளை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் வித்யாசமான சாதனை ஒன்று கின்னஸில் இடம் பிடித்துள்ளது. இந்த சாதனை மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் சேனல் டேப்பர். இவரது 8 வயதில் தனது நாக்கு வழக்கத்திற்கு மாறாக வித்யாசமாக இருப்பதை கவனித்து வந்துள்ளார். தொடர்ந்து நாக்கு நீளமாக வளர்வதையும் தனது பள்ளியில் சக மாணவர்களுடன் பேசியுள்ளார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது என கின்னஸ் உலக சாதனையுடன் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி உலகின் நீளமான நாக்கை கொண்ட பெண் என்ற சேனல் டேப்பர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரின் நாக்கு 9.75 சென்டிமீட்டர் நீளம் கொண்டுள்ளது. அதாவது ஒரு சாதாரண மனிதனின் நாக்கை விட இவரின் நாக்கு இரண்டு மடங்கு நீளமாக உள்ளது.
பெண்களில் மிக நீளமான நாக்கைக் கொண்டவர் என்ற சாதனையை சேனல் டேப்பர் கின்னஸ் சாதனை படைத்தாலும் கூட, உலகின் மிக நீளமான நாக்கைக் கொண்டவர் என்ற பட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த நிக் ஸ்டோபெர்லுக் என்பவர் ஏற்கனவே பெற்றுள்ளார் . இவரது நாக்கு 10.1 செ.மீ (3.97 அங்குலம்) நீளம் கொண்டது. இது சேனல் டோப்பரை விட சற்று நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.