வானிலை ஆய்வு மையத்தின்.. முதல் பெண் தலைவராக நாளை பொறுப்பேற்கிறார்.. அமுதா!
சென்னை: வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். நாளை முதல் இதன் தலைவராக அமுதா பொறுப்பேற்கிறார். இவர் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை வானிலை ஆய்வு மையத்தில், தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக பணிபுரிந்தவர் பாலச்சந்திரன். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மூலம் தமிழ்நாட்டின் நான்கு பருவ காலகட்டத்தில் நிலவும் வானிலை தரவுகளை துல்லியமாக ஆராய்ந்து , வானிலை தொடர்பான செய்திகளை அவ்வப்போது பொது மக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்தர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதன் தலைவராக தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.
வடகிழக்குப் பருவமழை தொடர்பான தரவுகளை ஆராய்வதில் முனைவர் பட்டம் பெற்ற அமுதா கடந்த 34 வருடமாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.