அம்பத்தூரில் பயங்கரம்.. ஏசி தீப்பிடித்து எரிந்து .. தாய், மகள் பலி

Su.tha Arivalagan
Sep 30, 2023,10:33 AM IST

சென்னை:  சென்னை அருகே அம்பத்தூரில் வீட்டில் ஏசி தீப்பிடித்து எரிந்து வயர்கள் எரிந்து வந்த புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஹாலினா (51). இவரது மகள் நஸ்ரியா (16). நேற்று இரவு வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்து விட்டு தாயும் மகளும் படுத்துத் தூங்கப் போயுள்ளனர்.




ஏசி போட்டு தூங்கியுள்ளனர். இந்த நிலையில் ஏசி மெஷினில் மின்சாரக் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஏசி மெஷினில் ஏற்பட்ட தீயால் வயர்கள் தீப்பிடித்து எரிந்து அந்த அறை முழுக்க தீ பரவியது. புகையும் பரவியது. இதில் ஹாலினாவும், நஸ்ரியாவும் சிக்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.


இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தாய் மகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோல ஏசி மெஷினில் தீப்பிடிக்கும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஏசி மெஷின்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்தால் இதுபோன்ற விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளதாக ஏசி மெக்கானிக்குகள் எச்சரிக்கிறார்கள். முறையான பராமரிப்பு இருந்தால் மட்டுமே இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.