முகேஷ் அம்பானி பிள்ளைகளுக்கு "கமிஷன்" மட்டும்தான்.. சம்பளம் கிடையாது!

Su.tha Arivalagan
Sep 27, 2023,12:19 PM IST

டெல்லி: இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் 3 பிள்ளைகளுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மாதச் சம்பளம் தரப்பட மாட்டாதாம். அதற்குப் பதில் போர்டு மீட்டிங், கமிட்டி மீட்டிங்குகளுக்கு வரும்போது அதற்கான செலவுத் தொகை மட்டுமே தரப்படுமாம்.


அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் மற்றும்  மகள் இஷா (இருவரும் இரட்டையர்கள், வயது 31), இளைய மகன் ஆனந்த் (28 வயது) ஆகியோர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர்.  தந்தை முகேஷ் அம்பானிக்கு தற்போது 66 வயதாகிறது. அவர் கடந்த 2020ம் ஆண்டிலிருந்தே சம்பளம் வாங்குவதில்லை.  இந்த நிலையில் தனது பிள்ளைகளுக்கும் சம்பளத்தை நிறுத்தி விட்டார் முகேஷ். இதுதொடர்பான தீர்மானமும் போடப்பட்டுள்ளது.




இதேபோலத்தான் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி போர்டு இயக்குநராக கடந்த 2014ம் ஆண்டு நியமிக்கப்பட்டபோதும் சம்பளம் இல்லாதவராக நியமிக்கப்பட்டார். அவருக்கும் பீஸ் மட்டும்தான். அதேசமயம், கடந்த 2022-23 நிதியாண்டில் அவர் பீஸாக ரூ. 6 லட்சமும், கமிஷனாக ரூ. 2 கோடியும் சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.