அமேஸானின் அடுத்த ஷாக்கர்.. மேலும் 9000 பேரை வேலையை விட்டு அனுப்ப முடிவு
கலிபோர்னியா: பேஸ்புக்கின் மெட்டா கடந்த வாரம் 10,000 பேரை வேலையை விட்டு அனுப்பப் போவதாக அறிவித்த நிலையில் தற்போது அமேஸான் நிறுவனம் 9000 பேரை வேலையை விட்டு நீக்கவிருப்பதாக கூறியஉள்ளது.
ஏற்கனவே மெட்டா நிறுவனம் 11,00 பேரை தனது முதல் சுற்று ஆட்குறைப்பில் பணிநீக்கம் செய்தது என்பது நினைவிருக்கலாம். தற்போது மேலும் 10,000 பேரை அது படிப்படியாக நீக்கவுள்ளது. இந்த வரிசையில் அமேஸானும் இணையவுள்ளது.
அடுத்த சில வாரங்களில் 9000 பணியாளர்களை நீக்கப் போவதாக அமேஸான் அறிவித்துள்ளது. அமேஸான் வெப்சர்வீஸ், விளம்பரம் மற்றும் டிவிட்ச் ஆகிய பிரிவுகளில் இந்த வேலை நீக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து பெரிய ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. டிவிட்டரில் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடந்த நிலையில் தொடர்ந்து அங்கு அவ்வப்போது ஆட்கள் நீக்கப்பட்டுக் கொண்டே வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டிரெண்ட் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.