amazon great indian festival sale : நெட் பேங்கிங் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் புகார்

Aadmika
Oct 07, 2023,10:29 AM IST

டில்லி : அமேசான் மற்றும் ஃபிளிப்காட்டில் விழாக்கால விற்பனை துவங்கியதால் அதிகமானவர்கள் பொருட்களை வாங்க குவிந்தனர். அந்த சமயத்தில் பல வங்கிகளின் நெட் பேங்கிங் சேவை முடங்கியதால்  வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


அமேசான், ஃபிளிப்காட் போன்ற ஆன்லைன் விற்பனை இணையதளங்களில் விழாக்காலங்களின் போது சலுகை விலையில் தள்ளுபடியுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். நவராத்திரி பண்டிகை துவங்க உள்ளதால் இந்த ஆண்டிற்கான விழாக்கால விற்பனையை   great indian festival sale என்ற பெயரில் அமேசான் மற்றும் ஃபிளிப்காட் நிறுவனங்கள் நேற்று துவங்கின. இதில் ஐபோன்கள், டேப்லட்கள் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளன.




பிரைம் மற்றுமண பிரிமீரியர் உறுப்பினர்களுக்கான இந்த சலுகை விலை விற்பனை அக்டோபர் 07 ம் தேதி நள்ளிரவுடனும், பிரீமியம் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கான சலுகை விலை விற்பனை அக்டோபர் 08 ம் தேதி நள்ளிரவுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டதால் பலரும் தங்களின் விருப்பமான பொருட்களை மிக வேகமாக ஆர்டர் செய்ய துவங்கினர்.


ஆன்லைனில் விற்பனை துவங்கிய சில நிமிடங்களிலேயே ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஐபோன்கள், டேப்லேட்கள் என  பலவிதமான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர். குறிப்பாக டேப்லெட்களுக்கு 60 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டதால் அதிகமானவர்கள் வாங்கினர். தங்களுக்கு விருமான பொருள் விற்று தீருவதற்குள் சீக்கிரம் ஆர்டர் புக் செய்த விட வேண்டும் என பல வாடிக்கையாளர் வேக வேகமாக முன்பதிவு செய்ய வந்தனர்.


எல்லாம் முடித்து கடைசியாக நெட் பேங்கிங் சேவை மூலம் பணம் செலுத்த சென்ற போது ஆக்சிஸ், ஐசிஐசிஐ உள்ளிட்ட பல பிரபல வங்கிகளின் நெட் பேங்கிங் சேவை செயல்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். நெட் பேங்கிங் சேவை நள்ளிரவு நேரங்களில் செயல்படாமல் போனது தொடர்பாக தங்களின் வங்கி கிளைகளுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்த புகார் அளித்து வருகின்றனர்.  அமேசான், ஃபிளிப்கார்ட் ஆர்டரை விடுங்கள்...நள்ளிரவில் ஒரு அவசரம் என்றால் கூட பணம் நெட் பேங்கிங் மூலம் பணம் அனுப்ப முடியாதா? என பலரும் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.