அடடே அபாரம்ண்ணே.. ஆர்டரை கேன்சல் செய்து.. 2 வருடங்களுக்குப் பிறகு டெலிவரி ஆன குக்கர்!
டெல்லி: அமேசானில் ஒருவர் பிரஷர் குக்கர் ஆர்டர் செய்திருந்தார். பிறகு அதை கேன்சல் செய்து விட்டார். இது நடந்தது 2 வருடங்களுக்கு முன்பு. ஆனால் இப்போது அதே நபருக்கு அவர் ஆர்டர் செய்து பின்னர் கேன்சல் செய்த குக்கரை கொண்டு வந்து டெலிவரி செய்திருக்கிறது அமேசான்!
எப்புர்ரா என்று அந்த நபர் இப்போது குழப்பமாகியுள்ளார்!
அந்த வாடிக்கையாளரின் பெயர் ஜெய். இவர் 2022ம் ஆண்டு அமேசான் மூலமாக ஒரு குக்கருக்கு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் பின்னர் அதை கேன்சல் செய்து விட்டார். அவர் கட்டிய பணமும் ரீபன்ட் ஆகி விட்டது. இந்த நிலையில் அவருக்கு தற்போது அதே பிரஷர் குக்கரை அமேசான் நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. இதனால் ஜெய் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2 வருடங்களு்கு முன்பு நான் ஆர்டர் செய்த குக்கரை இப்போது டெலிவரி செய்ததற்கு நன்றி அமேசான் என்று அவர் டிவீட் போட்டுள்ளார்.
இந்த டிவீட் இப்போது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் இதற்குப் பதிலளிக்கையில், அனேகமாக இது செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த குக்கராக இருக்கும் என்று அவர் கலாய்த்துள்ளார். வழக்கமாக தாமதமான டெலிவரி நடப்பது இயல்புதான் என்றாலும் கேன்சல் செய்த ஆர்டரை, அதுவும் 2 வருடம் கழித்து கொண்டு வந்து டெலவரி செய்வதெல்லாம் வேற லெவல் என்று நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
இன்னொருவரோ, தலைவா இது பிரஷர் குக்கர் கிடையாது, பிரஸ்டீஜியஸ் குக்கர்.. ரொம்ப அதிர்ஷ்டக்காரர் நீங்க என்று கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்