மது பிரியர்களே No cheers!.. பிப்ரவரி 1 முதல்.. தமிழகம் முழுவதும்.. மது விலை உயரப் போகுது!

Manjula Devi
Jan 30, 2024,06:05 PM IST
சென்னை: தமிழக முழுவதும் டாஸ்மார்க் கடைகளில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மது பிரியர்கள்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறார்கள். சாயந்திரம் 6 மணிக்கு மேல் தெருவுக்குத் தெரு "சியர்ஸ்"தான்.. காய்கறிக் கடை போல டாஸ்மாக் கடைகளும் ஏகமாகவே உள்ளன. அந்த அளவுக்கு மது பிரியர்களும், டாஸ்மார்க் கடைகளும் பெருமளவில் உள்ளனர். 

தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் மூலமாகவே பெருமளவு வருமானம் வருகிறது. இதை வைத்துத்தான் பல திட்டங்களுக்கு அரசு செலவிட்டு வருகிறது. சமீபகாலமாக வெள்ளம், மழை  போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய அதிகமாக நிவாரணத் தொகை செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  நிதி நிலைமையை சமாளிப்பதற்காக குடிகாரர்களின் பாக்கெட்டில் கை வைக்கவுள்ளனர். அதாவது டாஸ்மாக் மது பானங்களின் விலையை உயர்த்தியுள்ளனர்.




தமிழகம் முழுவதும் மொத்தம் 4,829 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நடுத்தர வகை, சாதாரண வகை, உயர்தர வகை,பீர், ரம், ஒயின் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. அவ்வப்போது பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விலை உயர்த்தப்படும்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலையை உயர்த்துவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,  குவார்ட்டர் அதாவது 180 மில்லி அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரகம் மதுவின் விலை 10 ரூபாய் உயர்ந்தப்பட்டுள்ளது. அதே மாதிரி 180 மில்லி கொண்ட உயர்தர மதுவின் விலை ரூபாய் 20 உயர்த்தப்பட்டுள்ளது. ஆப் மற்றும் ஃபுல் அளவு கொண்ட மது பானங்கள் 30 முதல் 80 ரூபாய் வரை விலை உயருகிறது.

மேலும் பீர், ரம், ஒயின், உள்ளிட்ட மது வகைகள் 650 மில்லி அளவு கொண்ட மது பானங்களின் விலை ரூபாய் 10 உயர்ந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

சியர்ஸ் மக்களே!