Ranchi Test: எடுத்த எடுப்பிலேயே டாப்புக்குப் போன ஆகாஷ் தீப்.. வேற லெவல் Debut!
Feb 23, 2024,06:43 PM IST
ராஞ்சி: ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் அறிமுக பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அசத்தலாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அறிமுகமாகியிருக்கிறார். முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இந்தப் போட்டியில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீசினார். அவரது பந்து வீச்சை எதிர்கொண்ட ஜாக் கிரான்லி கிளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப் துள்ளி குதித்தார். தொடர்ந்து பென் டக்கெட்டையும் அபாரமாக அவுட்டாக்கினார் ஆகாஷ் தீப். அவரது மூன்றாவது விக்கெட்டாக வந்தவர் ஒல்லி போப். எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் போப். அதுவும் டக் அவுட்டானார். தனது முதல் போட்டியிலேயே ஒரு போல்டு, ஒரு கேட்ச், ஒரு எல்பிடபிள்யூ என அசத்தினார் ஆகாஷ் தீப்.
தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அதிரடி காண்பித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார். ஐபிஎல் பெங்களூரு அணிக்காக இவர் விளையாடுவதால் ஆர்.சி.பி.ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
ஏழ்மையான பின்னணி
இந்தியாவின் 313வது டெஸ்ட் வீரராக அறிமுகம் ஆகியிருக்கும் ஆகாஷ் தீப், பீகார் மாநிலம் சசராம் என்ற ஊரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயது முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இவர், குடும்பத்தின் வறுமை காரணமாக கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கியிருந்தார். தனது மாமா கொடுத்த ஊக்கத்தால் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பினார்.