பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. யாரை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது?.. எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: இந்த ஆட்சியில் பெண்ளுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஒட்டு மொத்தமாக இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. யாரை காப்பாற்றுவதற்காக இந்த அரசாங்கம் முயற்சி செய்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி பேசுகையில், மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பது தான் கட்சி. மக்களுக்கு பிரச்சனை ஏற்படும் பொழுது, அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பது தான் ஒவ்வொரு கட்சியினுடைய நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் அண்ணா திமுக இருக்கிறது. பல கட்சிகளும் அந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அதனை அதிமுக வரவேற்கிறது. பிரேக்கில்லாத வட்டி போல இந்த ஆட்சி போய் கொண்டிருக்கிறது.
2024ம் ஆண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு அமைந்த ஆண்டாக உள்ளது. நாளை 2025ம் ஆண்டு பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள ஆண்டாக மலர இறைவனை பிரார்த்திக்கின்றேன். கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம் திமுகவின் திட்டம் இல்லை. நான் முன்மொழிந்த கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
பொள்ளாச்சி சம்பவத்தில் எப்படியெல்லாம் ஆர்பாட்டம் செய்தார்கள். அண்ணா பல்கலை சம்பவத்தில் இவர்களுக்கு வேண்டப்பட்டவர் இருப்பதால் தான் அமைதி காக்கிறார்கள். இந்த ஆட்சியில் பெண்ளுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஒட்டு மொத்தமாக இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. யாரை காப்பாற்றுவதற்காக இந்த அரசாங்கம் முயற்சி செய்கிறது, காவல் துறையும் முயற்சி செய்கிறது.
நிச்சயமாக அண்ணா திமுக ஆட்சிக்கு வரும். அப்போது இவை எல்லாவற்றிற்கும் தீர்வு காணப்படும். சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படவில்லை. அண்ணா பல்கலைகழகத்தில் சிசிடிவி கேமிரா இயங்கவில்லை என்கின்றனர். அவ்வளவு பெரிய கல்லூரியில் சிசிடிவி கேமிரா இயங்க வில்லை என்றால், உண்மைக் குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்க முடியும். கேமிரா எந்த நிலையில் இருக்கிறது என்ற உண்மை கூட தற்போது மறைக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை குழப்பி வருகின்றனர் என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்