தங்கம் விலை.. நேத்து ஏறுச்சு.. இன்னிக்கு இறங்கிருச்சே!
சென்னை: தங்கத்தின் விலை நிலையற்ற நிலையிலேயே உள்ளது. அக்டோபர் 4ம் தேதி குறைந்திருந்த தங்கம் அக்டோபர் 5ம் தேதி சற்று அதிகரித்து இருந்தது. ஆனால் இன்று மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.
தங்கத்தின் விலை ஏற்ற இறக்க நிலையில்உள்ளதால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் சற்று தயக்கம் காண்பித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் மாற்றங்கள் வந்தபடி உள்ளது.
தொடர்ந்து இறங்கி வந்த தங்கத்தின் விலை நேற்று விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் மீண்டும் தங்கம் விலை உயருமோ என்று பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். ஆனால் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் , இன்று (06-10-23) தங்கம் விலை 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5285 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 42280 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5765 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து11 ரூபாய் குறைவாகும்.
தங்கம் விலை தான் இப்படி என்றால், வெள்ளியின் விலையும் குறைந்தே உள்ளது. இன்றைய வெள்ளி 1 கிராம் விலை 70.60 ரூபாயாகும். இது நேற்றைய விலையை விட 50 காசுகள் குறைந்துள்ளது. 8 கிராம் வெள்ளியின் விலை 564.80 ரூபாயாக உள்ளது.