அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைவதற்கு சாத்தியமே இல்லை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: ஓபிஎஸ் உடன் இணைவதற்கு சாத்தியம் இல்லை. அதிமுக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர் ஓபிஎஸ். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மறைந்த அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு நேரில் வந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ஓபிஎஸ் உடன் இணைவதற்கு சாத்தியம் இல்லை. அதிமுக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர் ஓபிஎஸ். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை. தமிழகப் பிரச்சனை குறித்து அமிக்ஷாவிடம் பேசினேன்.
தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடைபெறும். தேர்தல் நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். 11 மாதத்திற்கு முன்பு என்ன சொன்னாலும் நிலைக்காது. அதனால் கூட்டணி அமைக்கும் போது கட்டாயம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது எங்களை மிரட்டுவதற்கு என்ன இருக்கிறது.
அதேபோல் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தான் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பேசுகிறோம். நாங்களாக எந்த கருத்தையும் சொல்வதில்லை. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் செய்தது யார் என்பதை கண்டுபிடியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.