கபாலி நடிகை ராதிகா ஆப்தேக்கு.. 12 வருடம் கழித்து குழந்தை பிறந்தது.. வைரலாகும் புகைப்படம்!

Manjula Devi
Dec 14, 2024,12:14 PM IST

சென்னை: நடிகை ராதிகா ஆப்தே தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக கையில்  குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


தமிழ் சினிமாவில் தோனி திரைப்படம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கபாலி திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தமிழை விட  ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி மட்டும் இல்லாமல் பெங்காலி, கன்னடம், மராத்தி, தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து அசத்தியவர். பல்வேறு வெப் சீரியஸ்களும் நடித்துள்ளார். 




அவ்வப்போது கிளாமரான புகைப்படத்துடன் நடித்து பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியவர். அதேபோல் எதையும் துணிச்சலுடன் ஓப்பனாக பேசும் குணம் கொண்டவர். கடந்த 2011ஆம் தேதி பெனெடிக்ட் டெய்லர் என்பவரை காதலித்து வருவதாக தெரிவித்து அவருடன் லிவிங்டூ கெதராக வாழ்ந்து வந்தார். 2012 ஆம் ஆண்டு காதலித்த நபரை திருமணம் செய்து கொண்டார். நடிகை ராதிகா ஆப்தே திருமணம் முடிந்த பிறகும் பல மொழிகளில் மாறி மாறி படங்கள் நடித்து வந்ததால் குழந்தை பெறுவதை தள்ளி வைத்ததாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் நடிகை ராதிகா ஆப்தே மற்றும் பெனெடிக்ட் டெய்லர் தம்பதிக்கு  12 வருடம் கழித்து குழந்தை பிறந்துள்ளது. அத்துடன் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ராதிகா ஆப்தே சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்