கட்டப் பஞ்சாயத்து பண்றாங்க.. ரத்னம் ரிலீஸாகாவிட்டால்.. சும்மா இருக்க மாட்டேன்.. விஷால் ஆவேசம்!

Manjula Devi
Apr 25, 2024,05:20 PM IST

சென்னை: விஷால் நடித்த ரத்தினம் படம் நாளை வெளியாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை படத்தை ரிலீஸ் பண்ணவில்லை என்றால், நான் சும்மா இருக்க மாட்டேன் என நடிகர் விஷால் ஆவேசமாக பேசியுள்ளார்.


நடிகர் விஷால் நடித்துள்ள ரத்தினம் படம் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் விஷால் பாக்கிப் பணம் தரவில்லை என ஒரு புகார் எழுந்துள்ளதாம். இதற்கு மறுப்பு தெரிவித்து விஷால் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் நடிகர் விஷால் கூறியிருப்பதாவது:


வணக்கம் நான் நடிகர் விஷால் பேசுகிறேன். ரத்தினம் படம் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. நான் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர். திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சிதம்பரம் அவர்கள் தான் செக்கரட்டரி. மீனாட்சி அவர்கள் பிரசிடெண்ட். அவர்களுக்கு இந்த பதிவை நான் வெளியிடுகிறேன். ஏன் இந்த பதிவை வெளியிடுகிறேன் என்றால். சம்பந்தமில்லாமல் ஒரு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் விஷால் வந்து காசு கொடுக்கணும். பாக்கி இருக்கு அப்படின்னு ஒருவர் சொல்லியிருக்கிறார்.




அவர் உங்க சங்கத்துல மெம்பரும் கிடையாது. இந்த கடிதத்தின் படி நான் காசு கொடுக்க வேண்டும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, எந்த ஆதாரமும் கிடையாது. வெள்ளிக்கிழமை என்னுடைய படம் ரிலீஸ் ஆகுது. இப்ப வரைக்கும் எந்த தியேட்டர் உரிமையாளரை கேட்டாலும் நீங்க என்ன சுத்தல்ல விடுறீங்க. எனக்கும் அந்த நபருக்கும் சம்பந்தம் கிடையாது. முதல்ல நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேங்கறீங்க. நான் கேட்ட கேள்வி ஒரே கேள்விதான்.


ஒருவேளை கொடுக்க வேண்டியதாகவே இருந்தால் அக்ரீமெண்ட்டா இருக்கா.. விஷால் சைன் பண்ணி இருக்கானா.. அதுதான் நாங்க பார்க்கிறது. ஏன்னா நானும் ஒரு பொதுச் செயலாளராக, ஒரு நடிகனுக்கு பாக்கி இருந்தா அவங்க வந்து ஒரு அக்ரீமெண்டோ, ஒரு காப்பியோ கொடுத்தால் தான் நாங்க புரொடியூசர் கிட்ட லெட்டர் கொடுத்து சம்பளம் பாக்கியை வாங்குவோம். இதுதான் நடைமுறையில் இருக்கிற விஷயம். இப்ப பெடரேஷன் இல்லாமல், தயாரிப்பாளர் சங்கம் இல்லாமல், ஒரு பைனான்சியரின் அனுமதி இல்லாமல், நாங்க படத்தை ரிலீஸ் பண்ண முடியாது. ஒரு ஆதாரம் தேவை பொதுவான ஆதாரம் இல்லாமல் வெறும் ஒரு கடிதத்தை வச்சிக்கிட்டு எல்லா உரிமையாளர் கிட்டயும் இந்த படத்தை போடக்கூடாதுன்னு என்னை சுத்தல்ல விடுறீங்க.


இந்த படத்துக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது. நான் இந்த படத்தில் நடித்து இருக்கேன். இந்த நபருக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. நான் அந்த நபருக்கு காசு கொடுக்கணும் என்ற அவசியம் கிடையாது. நான் அதற்கான ஆதாரத்தை கொடுக்கத் தேவையில்லை. நீங்க கேட்க வேண்டிய ஆள் அவங்க கிட்ட தான் ஆதாரம் கேட்கணும். நான் சைன் பண்ணி இருக்கேனா.. இல்லையா.. என்ற ஆதாரத்தை அவங்க தான் கொடுக்கணும். ஏதாவது ஆதாரம் இருந்துச்சுன்னா காட்டுங்க. கண்டிப்பா கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் கொடுக்கிறேன். 


எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஆறு மணி நேரமாக என்னை சுத்தல்ல விடுறீங்க. சிதம்பரம் அவர்களுக்கு போன் போட்டதும் கால் வெயிட்டிங் போகுது. ஆனா திரும்ப போன் பண்ணா எடுக்க மாட்டேங்கறாங்க. என்னுடைய நண்பர் சீனு சாமி இப்ப இந்த படத்தை வாங்கி இருக்காரு. ஒரு திரைப்படம் புக்கிங் ஆகுற நேரத்துல ஒரு திரைப்படம் ஓடுவது ரொம்ப பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இந்த மாதிரி  பண்ணும்போது அதற்குப் பெயர் கட்டப்பஞ்சாயத்து.


இது உங்களுக்கு மட்டும் பதிவு பண்றேன் என்று நினைக்காதீங்க. சிஎம் க்கும் சரி.. திருச்சி கலெக்டருக்கும் சரி.. திருச்சி எஸ் பி க்கும் சரி.. போலீஸ் ஸ்டேஷனுக்கும் சரி.. எல்லாருக்கும் சொல்லிக்கிறது என்னனா  கட்டப்பஞ்சாயத்து விட்டு இது வேறு எதுவும் கிடையாது. நான் கோபத்தில் சொல்றேன்னு நினைக்காதீங்க. ஏன் இந்த பதிவை போடுகிறேன்னா, விஷாலுக்கே இந்த மாதிரி ஒரு நிலைமை என்றால். ஒரு புதுமுக நடிகனுக்கோ.. எந்த புது முக புரடியூசருக்கோ..  என்ன கதி என்பது தெரியப்படுத்த வேண்டியது என்னுடைய கட்டாயம். அது என்னுடைய கடமை என நினைக்கிறேன். 


வெள்ளிக்கிழமை என் படத்தை ரிலீஸ் பண்ண வில்லை என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன். எப்படி எனக்கு சம்பந்தம் இல்லாத கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்கிறீங்களோ. அதுபோல எனக்கும் உரிமை இருக்கு ந்த நாட்டில். இதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை எடுக்க முயற்சி எடுக்க விட்டுறாதீங்க. தயவு செய்து ஆதாரம் கேளுங்க. ஏன் சம்பந்தமே இல்லாமல் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படத்திற்கு கம்ப்ளைன்ட் கொடுக்கிறார்கள் என்றால் அதிலேயே தெரியுது பாதி குற்றவாளி என. ஏன் ஏப்ரல் 19ல், ஏப்ரல் ஒன்றில் ஏன் பிப்ரவரி மாதத்தில் கூட கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கலாமே. 


இரண்டு நாள் முன்னாடி வர படத்திற்கு ஆதாரம் இல்லாமல் கம்ப்ளைன்ட் கொடுக்கிறவங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்குறீங்க. நம் நாட்டில் கட்டப்பஞ்சாயத்துக்கு என்ன சட்டம் என்ன தண்டனை என்பது உங்களுக்கே தெரியும். நான் வளர்ந்து வரும் நடிகன். கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி உழைத்து வந்த கலைஞன். தயவுசெய்து யாருடைய உழைப்பு கூடையும் விளையாடாதீங்க என்று அவர் கூறியுள்ளார்.