காமெடி நடிகர் மகனுக்கு உதவி.. மொத்த பீஸையும் கட்டி அசத்திய விஜய் சேதுபதி.. நெகிழ்ந்த குடும்பம்!

Manjula Devi
Aug 16, 2024,11:30 AM IST

சென்னை:  எனது மகன் விண்ணரசனுக்கு உயர்கல்வி படிப்பதற்கு உதவி செய்த நடிகர் விஜய் சேதுபதியின் உதவியை என் வாழ்நாளிலும் மறக்க முடியாது என காமெடி நடிகர் தெனாலி உணர்வு பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி கலைஞர்கள் பயணம் செய்து வந்துள்ளனர். அதில் பலர் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை சரியாக  பயன்படுத்திக் கொண்டு முன்னேறி உள்ளனர். அதில் ஒரு சிலரோ  காமெடி நட்சத்திரங்களுடன் இணைந்து குழுவாக நடித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர் விவேக் உடன் அதிக படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர்தான் நடிகர் தெனாலி. 




வைகைபுயல் வடிவேலுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர் பாவா லக்ஷ்மணன் அனைவருக்கும் அறிமுகமானவர். இவர் வின்னர், கோவை பிரதர்ஸ், மாயி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்  .அதிலும் குறிப்பாக மாயி படத்தில் இடம்பெற்ற அம்மா மாயயண்ணே வந்திருக்காங்க.. மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்ததற்காக.. மற்றும் நம் உறவினர்களாம் வந்திருக்காங்க.. வா மா மின்னல் என்ற காமெடி காட்சி மூலம் மிகவும் பிரபலமானார். 


நடிகர் தெனாலியின் மகன் விண்ணரசன். இவருக்கு எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில்  போதுமான கல்வி கட்டணம் செலுத்தி பிசியோதெரபி படிக்க முடியாத நிலைமை இருந்து வந்துள்ளது. சூழ்நிலையை அறிந்த பாவா லட்சுமணன் நடிகர் விஜய் சேதுபதியிடம் நேரில் சென்று நிலைமையை கூறியிருக்கிறார்.  நடிகர் விஜய் சேதுபதி உடனடியாக 76 ஆயிரம் ரூபாயை எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டியில் பிசியோதெரபி படிப்பதற்காக செலுத்தி விண்ணரசனின் படிப்பு தொடர உதவியுள்ளார். இதன் மூலம் அவர் பிசியோதெரப்பி படிப்பை வெற்றிகரமாக முடிக்க வழி ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து நடிகர் தெனாலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். என் சந்ததி கல்வியிலும் வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை என் வாழ்நாளில் நானும், என் மகனும் மறக்கவே முடியாது. நன்றி என்று கூறியுள்ளார்.  தெனாலி, அவரது மகன் மற்றும் நடிகர் லட்சுமணன் நடிகர் விஜய் சேதுபதி ஒரு செல்பியும் எடுத்து அவர்களை மகிழ வைத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்