கோட் பட புரமோஷன்.. நடிகர் விஜய் போட்ட அதிரடி தடை .. ஏன் என்னாச்சு.. பட் ரசிகர்கள் ஹேப்பிதான்!
சென்னை: விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று விஜய் உத்தரவிட்டுள்ளாராம். தனது அரசியலுக்காக தனது படத்தை பயன்படுத்தக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறாராம். இதனால் இந்த உத்தரவை ரசிகர்களும் மகிழ்ச்சியாகவே எடுத்துக் கொண்டுள்ளனர்.
விஜய் தநடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் தி கோட். படம் குறித்து மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. பாடல்களும் வேறு மாதிரியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இத்திரைப்படத்தில் அதி நவீன தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அத்துடன் விஜய் கட்சி தொடங்கியதன் பின்னர் வெளிவரும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும்.
பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வெங்கட்பிரபு, விஜய் இணையும் முதல் படம் இது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகை திரிஷாவும் இந்த படத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தி கோட் பட புரமோஷன் மற்றும் வெளியீட்டின் போது நோட்டீஸ், பேனர்கள் வைக்கும் போது அதில், தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெரை குறிப்பிடாமல் விஜய் மக்கள் இயக்கம் என பதிவு செய்ய வேண்டும் என கட்சித் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம். இது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவெக என்பது அரசியல் கட்சி பெயர் என்பதால் அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், திரைப்படங்களுக்கு கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும் நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.