நான் என்ன பொது சொத்தா உங்களுக்கு.. பாப்பராஸிகள் மீது பாய்ந்த.. நடிகை ஆடுகளம் டாப்ஸி!

Manjula Devi
Aug 24, 2024,12:54 PM IST

சென்னை: நான் பிரபலமான ஒரு தனி நபர் தானே தவிர பொது சொத்து கிடையாது என நடிகை டாப்ஸி பன்னு, விரட்டி விரட்டி புகைப்படம் எடுக்கும் பாப்பராசிகள் மீது பாய்ந்துள்ளார்.


நடிகை டாப்ஸி அடிப்படையில் ஒரு பஞ்சாபி பெண். 2010 ஆம் ஆண்டு  வெளியான ஜும்மண்டி நாதம் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமா வாழ்க்கையில் பயணிக்கத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இப்படத்தின் கதைக்களம், நடிப்பு,பாடல், என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் இப்படத்தில் வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாங்களா.. இல்ல வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா.. என்ற பாடல் மூலம் டாப்ஸி டாப்புக்குப் போனார்.




அதுவரை மில்க்கி பியூட்டியாக அறியப்பட்ட தமன்னாவை ஓரம் கட்டியது டாப்ஸியின் தோற்றமும் அழகும். இதனால் குறுகிய காலத்திலேயே பிரபலமாக மாறினார். இதன்பின்னர் வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி போன்ற படங்களில் நாயகியாகவும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.


தற்போது தமிழில் ஜெயம் ரவியுடன் ஜன கன மன படத்தில் இணைந்து நடித்துள்ளார். இப்படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. நடிகை டாப்ஸி 10 வருடங்களாக காதலித்த டென்மார்க்கை சேர்ந்த பாட்மிண்டன் பயிற்சியாளரான மத்யாஸ் போ என்பவரை கடந்த மாதம் 23ஆம் தேதி திடீரென திருமணம் செய்ததாக தகவல் வெளியானது.


திரை பிரபலங்கள் என்றாலே பாப்புலாரிட்டி இருக்கும்.  அவர்களைப் பின் தொடர்ந்து வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பது, அவர்களுக்கு கைகொடுப்பது என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பின் தொடர்வர்.அதற்காக ஒரு சிலர் செல்பி எடுத்துக் கொள்வர். இவர்களை பாப்பராஸி என்பார்கள். இவர்களின் செயலார் ஒரு சிலர் கோபப்படுவர். ஒரு சிலர் எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு சென்று விடுவர்.  இந்த நிலையில் நடிகை டாப்சி புகைப்பட கலைஞர்கள் பாப்பராஸி கலாச்சாரம் குறித்து விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பிரபலமான ஒரு தனி நபர் தானே தவிர பொது சொத்து கிடையாது. திரைக்குப் பின் இருக்கும் பெண்கள் நோ என்றால் நோ. ஆனால் அதுவே நாங்கள் கூறினால் ஏற்கமாட்டார்கள். நான் முதலில் பெண். அதற்குப்பின் தான் நடிகை. நான் இப்படி சொல்வதால்  இது எனக்கு ஏற்ற தொழில் இல்லை என சிலர் நினைக்கலாம். ஆனால் நடிப்பு என்பது நான் விரும்பும் தொழில் எனக் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்