ரெட்ரோ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார்.. நடிகர் சூர்யா..!
சென்னை: பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் நடிகர் சூர்யா.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படம் ரெட்ரோ. இது சூர்யாவின் 44-வது திரைப்படம் ஆகும்.
இவருடன் ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் கனிமா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் பூஜா ஹெக்டேவின் நடனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயத்தில் இப்பாடலில் இடம்பெற்ற 15 நிமிட காட்சிகள் சிங்கிள் டேக்கில் காட்சிப்படுத்தியுள்ளது பட குழு.
2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்து சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.