ரியாஸ்கானின் தாயாரும்.. உமா ரியாஸின் மாமியாருமான.. ரஷிதா பானு காலமானார்!
சென்னை: ரியாஸ்கானின் தாயாரும், உமாரியாஸின் மாமியாருமான, ரஷிதா பானு இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
நடிகர் ரியாஸ் கான் கேரளா மாநிலம், கொச்சியைச் சேர்ந்தவர். மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரான ரஷீத் மற்றும் ரஷீதா பானு தம்பதியின் மகனாவார். இவருக்கு திருமணமான ரோஷினி என்ற சகோதரி உள்ளார். ரியாஸ் கானின் தந்தை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தால் சென்னைக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தனர்.
பிறகு ரியாஸ் கான் சிறந்த பாடி பில்டராக தன்னை உருவாக்கிக் கொண்டு முதன் முதலில் மலையாள திரை உலகில் சுகம் சுககரம் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு தமிழில் கள்ளழகர், பத்ரி, பாபா, கஜினி, ரமணா, சமுத்திரம், அரசு, திருப்பதி, பேரரசு, உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அதே சமயம் குடும்பம், ரமணி vs ரமணி, சித்தி, அண்ணாமலை, உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரியாஸ்கான். இதற்கிடையே இவர், தமிழ் இசையமைப்பாளரான காமேஷ் மற்றும் நகைச்சுவை குணச்சித்திர நடிகை கமலா காமேஷின் மகளான உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஷாரிக், ஹமந்த் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
ரியாஸ் கானின் மனைவி உமாரியாசும் பல்வேறு முண்ணனி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளதுட, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றார். இவருடைய தாயார் கமலா காமேஷ். இவர் பிரபல நடிகை ஆவார். இவர் சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் கோதாவரி என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே தற்போது வரை பாராட்டப்பட்டு வருகிறது என்பதை நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் நடிகை கமலா காமேஷ் குறித்து திடீரென வதந்தி பரவியது. ஆனால் நடிகை உமா ரியாஸ் இதுகுறித்து தெளிவுபடுத்தினார். எனது அம்மா நலமாக உள்ளார். எனது மாமியார் ரஷிதா பானுதான் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 72 என்று விளக்கினார் உமா ரியாஸ்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்