youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...போலீஸ் கமிஷனரிடம் நடிகர் கருணாஸ் புகார்

Manjula Devi
Feb 24, 2024,05:49 PM IST

சென்னை: ஏற்கனவே பொய்யான தகவலை பரப்புவதாக ஏ.வி ராஜு மீது புகார் அளித்திருந்த நிலையில், நேற்று மீண்டும் பல youtube சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.


சேலம் மாவட்டம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏவி ராஜு. இவர் முன்னாள் முதல்வரும் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் மீது பல அடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.இதனால் ஏ.வி ராஜுவை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. இதனை அடுத்து கூவத்தூர் சம்பவத்தில் நடிகர் கருணாஸ் உடன் நடிகை திரிஷாவை தொடர்பு படுத்தி அவதூறு கருத்துக்களை பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதனால் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.




நான் நடிகராகவும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனர் ஆகவும் விளங்குகிறேன்.என் மீது வன்மம் கொண்டு அவதூறு மற்றும் அறுவறுக்குத் தக்க வகையில் பொய்யான தகவலை பரப்பி வந்த அரசியல் கட்சியை சேர்ந்த ஏவி ராஜு மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே நடிகர் கருணாஸ் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் நேற்று மீண்டும் youtube சேனலில் தவறான தகவலை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாததன் உள்ளிட்டோர் மீதும், இவர்களை போல் அவதூறு பரப்பும் பல youtube சேனல்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சென்னை கமிஷனரிடம்  நடிகர் கருணாஸ் மீண்டும் புகார்  மனு அளித்துள்ளார்.