"மலச்சிக்கல் இருக்குன்னு ஏன் சொல்லலை".. கத்திய பாஸ்.. காண்டான பெண்.. ரிசைன்!

Su.tha Arivalagan
Jul 31, 2023,05:08 PM IST

டெல்லி: எப்பப் பார்த்தாலும் "பாஸ்" திட்டிக் கொண்டே இருந்ததால் கடுப்பான பெண் வேலைக்குச் சேர்ந்த மூன்று நாட்களிலேயே அந்த விலையை உதறி விட்டார்.. "இப்பத்தான் நிம்மதியா இருக்கு.. நான் செஞ்சது சரிதானே மக்களே" என்று கூறி டிவீட்டும் போட்டுள்ளார்.


புதிதாக ஒரு வேலைக்குப் போவது என்பது எப்போதுமே எக்சைட்டிங்கான ஒன்றுதான். புதிய சூழலை சந்திக்கலாம்.. புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.. புதிய மனிதர்களை சந்திக்கலாம்.. புதிய பொறுப்புகளில்  புதிய அனுபவங்கள் கிடைக்கலாம்.. இப்படி நிறைய இருக்கும்.




ஆனால் ரசித்துச் செய்யும் வேலை மனதை போட்டு அழுத்த ஆரம்பிக்கும்போது, அது ஒரு பெரும் சுமையாக மாறும்போது, மனதையும், உடலையும் அது வருத்த ஆரம்பிக்கும்போது அந்த வேலையை உதறி விடுவதே உடல் ஆரோக்கியத்துக்கும்,  மன நலனுக்கும் நல்லது என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். அதைத்தான் செய்துள்ளார் ஒரு பெண்.


வேலை பார்க்கும் இடம் நச்சுத்தன்மை கொண்டதாக மாறும்போது, சுற்றிலும் இருப்பவர்கள் விஷக் கிருமிகளாக மாறும்போது அந்த இடத்தை விட்டு எவ்வளவு சீக்கிரம் நகர்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நல்லது. இதைத்தான் அந்தப் பெண் செய்துள்ளார்.


க்வீன் மாங்கோஸ்டீன் என்ற  பெயரில் ரெட்டிட் தளத்தில் அவர் போட்டுள்ள பதிவு தற்போது பலராலும் பாராட்டப்பட்டு பகிரப்படுகிறது. புதிதாக சேர்ந்த வேலையை விட்டு 3 நாட்களிலேயே அவர் விலகி விட்டார். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார். நான் செய்தது சரிதானே என்றும் அவர் கேட்டுள்ளார்.


அந்தப் பெண் போட்டுள்ள பதிவின் சாராம்சம்:


நான்  3 நாட்களில் வேலையை விட்டு விட்டேன். திங்கள்கிழமை வேலைக்குச் சேர்ந்தேன். புதன்கிழமை வரை வேலை பார்த்தேன்.  நான் வேலையை விட்டதற்கான காரணங்கள் இதுதான். நான் செய்தது சரியா என்பதை நீங்களே சொல்லுங்க




எனக்கு எனது மென்டார் கொடுத்த வேலையை நான் செய்து கொண்டிருந்தேன். எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் பாஸ் கூப்பிட்டு, ஏன் வேலை குவிந்து கிடக்கு, வேலை பார்க்காமல் என்ன பண்றே என்று சத்தம் போட்டார். இத்தனைக்கும் அவர் எனக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை.


கொடுத்த வேலையை முடித்து விட்டுப் போகாமல் ஏன் வேகம் வேகமாக வீட்டுக்குக் கிளம்புறே. ஏன் மெதுவா வேலை பார்க்கிறே..  இதெல்லாம் அவர் என்னிடம் சத்தம் போட்டுக் கூறிய மேலும் சில வார்த்தைகள்.


உனக்கு மன நலம் நல்லாதானே இருக்கு.. பிறகு ஏன் இப்படி இருக்கே.. இது என்னிடம் அவர் கேட்ட இன்னொரு கேள்வி. நான் நல்லாதான் இருக்கேன்.. என்று நான் விளக்கம் தர முற்பட்டபோது, மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். மேலும் பல வருடங்களுக்கு முன்பு டிப்ரஷன் தொடர்பான மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாகவும், அதை தற்போது நிறுத்தி விட்டதாகவும், நலமாகத்தான் இருக்கிறேன் என்றும் அவரிடம் விளக்கினேன்.


அதைக் கேட்டதும், இதை ஏன் முதலிலேயே சொல்லலை. இன்டர்வியூவின்போதே சொல்லியிருக்க வேண்டாமா என்று கூறி சத்தம் போட்டார். அப்படிச் செய்திருந்தால் நான் உன்னை வேலைக்கு எடுக்கலாமா வேண்டாமா என்பதை யோசித்திருப்பேனே என்றும் கூறினார். இன்டர்வியூவின்போது இதெல்லாம் சொல்லாமல் விடுவது, சட்டப்படி குற்றச் செயலா என்று  எனக்குத் தெரியவில்லை.


டாய்லெட் போனால் ரொம்ப நேரமாகிறது.. அப்படி அங்கு என்னதான் செய்கிறாய்.. இது இன்னொரு குற்றச்சாட்டு. ஒரே ஒருமுறை நான் பத்து நிமிடம் வரை டாய்லெட்டில் இருந்தேன்.  அதற்காகத்தான் இந்தக் கேள்வி.  எனக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறது. எனவே சற்று நேரமாகிறது என்று கூறினேன். இதை இன்டர்வியூவிலேயே ஏன் சொல்லலை என்று கூறி சத்தம் போட்டார். 


அவர் கேட்ட கேள்விக்கெல்லாம் நான் பொறுமையாக பதில் சொல்லச் சொல்ல, நீ வாயாடியாக இருக்கிறாய், வாதிடுகிறாய். உனக்கு டைம் தர்றேன்.. உன்னால் இங்கு வேலை பார்க்க முடியுமா என்பதை முடிவு பண்ணிச் சொல்லு என்று அவர் எனக்கு டெட்லைன் கொடுத்தார். அதைக் கேட்ட நான், நாளைக்கு வரையெல்லாம் நீங்க காத்திருக்கத் தேவையில்லை.. இப்போதே நான் வேலையை ரிசைன் செய்கிறேன் என்று கூறி விட்டு வந்து விட்டேன்.


இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. பெரிய நிம்மதியாக இருக்கிறது. டாக்சிக்கான இடத்தில் நிச்சயம் வேலை பார்க்க முடியாது.  சக ஊழியர்கள் நான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே சொன்னார்கள்.. பாஸ் அடிக்கடி கத்துவார், திட்டுவார் என்று. அதை நான் கண்கூடாகவே பார்த்தேன். என்னை மட்டுமல்ல. எல்லோரையும்தான். ஏன் வாடிக்கையாளரையும் கூட அவர் திட்டினார். இதற்கு மேல் அங்கிருப்பது சரியில்ல என்பதால் வந்து விட்டேன். நீங்களே சொல்லுங்க நான் செய்தது சரியா இல்லையா என்று அவர் போஸ்ட் போட்டுள்ளார்.


இந்த போஸ்ட்டுக்கு கருத்துக்கள் குவிகின்றன. பலரும் அவரது முடிவு சரியானதே என்று பாராட்டியுள்ளனர்.  அந்தப் பெண் தான் அமெரிக்காவைச் சேர்ந்தவர் இல்லை என்றும் அது அமெரிக்க நிறுவனம் அல்ல என்றும் விலக்கியுள்ளார்.  மேலும் அது ஒரு சிறிய நிறுவனம் என்றும், மொத்தமே 6 பேர்தான் உள்ளதாகவும். எச் ஆர் உள்பட எதுவுமே அங்கில்லை என்றும் பாஸ்தான் எல்லா முடிவுகளையும் எடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.