பிரியா விடை பெற்ற.. தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்..!

Manjula Devi
Apr 24, 2025,03:20 PM IST

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக நடை பெற்றது.


வாழ்க்கையில் எத்தனையோ நட்புகளை நம் கடந்து செல்வோம். நம் சிறு வயதில் உள்ள நட்புகள், நம் வளரும் பருவத்தில் வரும் நட்புகள், வளர்ந்த பின்பு வரும் நட்புகள் என பல்வேறு பாதைகளில் பயணித்துள்ளோம். எத்தனையோ காலம் கட்டங்களில் பலவிதமான நண்பர்களை நாம் கடந்து சென்றாலும் கூட நம் பள்ளிப்பருவ நட்பு என்பது இன்றும் நம் கண்ணை விட்டு மறையாது. அது ஒரு அழகிய கானா காலம். அதை  இன்றும் நாம் நினைத்து ரசிக்கும் போதும் கூட, தாய்யை விட்டு பிரியும் குழந்தையை  போல ஏக்கம் நம் மனதில் ஆழமாக பதிவதுண்டு. 




ஏனெனில் நம் பள்ளிப் பருவத்தில் வரும் நட்பு என்பது எவ்விதமான சலனமும் இல்லாமல், எதிர்பார்ப்பும் இல்லாமல், பாகுபாடின்றி தூய மனதுடன் அந்த காலகட்டத்தில் வரக்கூடிய நட்பு  மிகப் புனிதமாகவே போற்றப்படுகிறது. இதனால் இந்த நட்பை நாம் என்றுமே மறந்து விடமாட்டோம். இன்று கூட நான் என் பள்ளி பருவத்தில் அதை செய்தேன்.. எப்படி இருக்கும் தெரியுமா.. அந்த மாதிரி இப்போ ஒரு தருணம் அமையுமா.. என ஏயங்கும் எத்தனையோ பெண்களும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 


சரி என்றைக்காவது பிரிவு ஒன்றை சந்தித்து தான் ஆக வேண்டும். அந்த காலகட்ட நட்புகளை கடந்துதான் செல்ல வேண்டும். அந்த வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பிரியாவிடை பெறும் விழா நடத்தப்பட்டு வருகின்றது. எட்டாம் வகுப்பு  மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் தகுதியை அடைந்து வேறு பள்ளிக்கு செல்ல தயாராகின்றனர். அவர்களுக்கு இப்பள்ளி சார்பாக பிரியாவிடை கொடுத்து அவர்கள் மேலும் வாழ்வில்  அடுத்த கட்டத்திற்கு முன்னேற அவர்களை வாழ்த்தி வழி அனுப்பும் விழா நடத்தப்பட்டது.                     


இவ்விழாவின் தொடக்கமாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் வரிசைப்படி நின்றனர்.அவர்கள் முன்பாக ஏழாம்  வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருந்தனர்.ஆசிரியை முத்துலெட்சுமி   அனைவரையும் வரவேற்றார்.




மாணவிகளின்   திருக்குறள் நடனம் நடைபெற்றது. மாணவ, மாணவியர் கல்வியை எண்ணிக்கொண்டு   பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்ற அதனை தொடர்ச்சியாக எட்டாம்  வகுப்பு மாணவர்கள் அனைவரும்  கையில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றினர். எட்டாம்  வகுப்பு மாணவி முகல்யா    உறுதி மொழி வாசிக்க எட்டாம்  வகுப்பு  மாணவர்கள்  அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.அதன் பிறகு தீப  ஒளியை  ஏழாம்  வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தி கொடுக்க அவர்கள் தீபத்தை வாங்கி கொண்டனர்.அடுத்த வகுப்பு மாணவர்கள் சார்பில்  மாணவி சாதனஸ்ரீ  ஏற்புரை வழங்கினார்.


விழா நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர்  நன்றி கூறினார்.விழாவில் மாணவ,மாணவியர் முதல் வகுப்பு முதல் இப்பள்ளியில் படித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.விழாவில் ஏராளமான  பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.