A Love poem.. கடலின் ஆழம் அவளது காதலின் நிமிடங்கள்... !

Su.tha Arivalagan
Feb 18, 2025,12:12 PM IST

- தேவி


நிலவின் மடி அவளது பார்வை...

தென்றலின் உறைவிடம் அவளது மனம்..

மேகங்களின் சாரல்  அவளது ஓரப்பார்வை....

மயில் தோகையின் அழகு அவளது எண்ணங்கள்.....

வானவில்லின் ஓவியம் அவளது மௌனங்கள்..... 

கடலின் ஆழம் அவளது காதலின் நிமிடங்கள்... 

வண்ணத்துப் பூச்சியின் சிறகு அவளது கால் தடம்.....




பூ இதழின் நுனி அவளது மௌன தீண்டல்.....

தென்றலின் வாசம் அவளது பாஷைகளின் வழித்தடம்......

மலரின் தேகம் அவளது வார்த்தையின் பிறப்பிடம்.....

மேகங்களின் எல்லை அவளது கனவின் இருப்பிடம்

மழை சாரலின் அமிர்தம் 

அவளது வார்த்தைகளின் ஓவியம்

மேகங்களின் யுத்தம் 

அவளது பார்வையின் தேடல் ...

பௌர்ணமியின் பிரகாசம் 

அவளது கருவிழியின் காதல் கோலங்கள்

பனித்துளியின் தீண்டல்கள்  

அவளது தித்திப்புப் பார்வை...

புள்ளிமானின் அழகு 

அவளது துள்ளலுக்குக் கால்தூசி....

வேரின் ஆழம்

அவளது அன்பின் வேகம்

காணும் காட்சியெங்கும்

காதலின் வேதம்!