ஏப்ரல் 25 - இந்த நாளில் என்ன காரியங்கள் செய்யலாம் ?
இன்று ஏப்ரல் 25, 2023 செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு சித்திரை 12
வளர்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 11.19 வரை பஞ்சமி திதியும் பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 03.35 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.35 வரை அமிர்தயோகமும், காலை 05.59 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்யலாம் ?
மந்திரம் ஜபம் செய்வதற்கு, வயலில் களைகள் அகற்றுவதற்கு, உழவு மாடு பராமரிப்பதற்கு, கட்டிடம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, தோஷ பரிகாரங்கள் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்து வருவதால் முருகப் பெருமாளை வழிபட்டால் கடன் பிரச்சனைகள் நீங்கும். துர்க்கை அம்மனை வழிபட்டால் துக்கங்கள் விலகி நன்மைகள் பெருகும்.