மூளைச்சாவு அடைந்த.. 11 வயது சிறுவனின் உடலை தானம் கொடுத்த.. பெற்றோர்கள்!
திண்டுக்கல்: கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். இந்தச் சிறுவனின் உடல் உறுப்புகளை பெற்றோர்கள் தானம் அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பழனிச்சாமி. இவருக்கு 11 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்தார். கடந்த சில நாட்களாகவே கடும் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக கிஷோர் திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் அந்தச் சிறுவனுக்கு காய்ச்சல் குறையவில்லை. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார் கிஷோர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதறி துடி துடித்தனர். மகனை இழந்த மீள முடியாத துயரிலும் கூட, தன் மகனின் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர் கிஷோர் பெற்றோர்கள்.
இதைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை உடல் உறுப்புகள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக கொடுக்கப்பட்டது. தன்மகன் இறந்தாலும் அந்த சோகத்தை தங்களுக்குள் மறைத்து விட்டு பல குழந்தைகள் வாழ வேண்டும் என்ற கருணை உள்ளம் படைத்த இவர்களது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்