10 லட்சம் கோடி காலி... 3வது இடத்திலிருந்து 24 வது இடத்திற்கு இறங்கிய அதானி

Aadmika
Feb 15, 2023,04:26 PM IST
புதுடில்லி : கடந்த சில நாட்களாக இந்தியாவின் ஹாட் டாப்பிக்கே அதானி தான். ஒரு பக்கம் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கிறது. இன்னொரு பக்கம் பங்குச்சந்தை அடி வாங்குகிறது. இதனால் இனி அதானி குழுமத்தின் நிலை அடுத்து என்ன ஆகுமா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.



ஜனவரி 24 ம் தேதி வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையில், கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதானி நிறுவனம் மீது இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரணையை துவக்கி உள்ளது. இதன் விளைவாக அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன.  


குரோஷியாவின் இதய வடிவ தீவு..  விற்பனைக்குத் தயார்.. ஜஸ்ட் ரூ. 91 கோடிதான்!


தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் அதானி குழுமம் சிக்கி வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் அதானி குழும பங்குகளின் விலை அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. இதன் காரணமாக 10 லட்சம் கோடிக்கும் மேல் அந்நிறுத்தினத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி அடி மேல் அடி விழுந்து கொண்டிருப்பதால் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த அதானி, தற்போது 24 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

ஆனால் இத்தனை நடந்தும், திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சனைகள், சர்ச்சைகள் இருந்தும், தங்கள் நிறுவன பங்குகளில் ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்கமான சூழல் தற்காலிகமானது மட்டுமே. விரைவில் தங்கள் நிறுவனத்தின் பங்குகள் பழைய நிலைக்கு திரும்பும் என கெளதம் அதானி அறிக்கை வெளியிட்டுள்ளார்.