வெறிச்சோடிய சென்னை சாலைகள்...3 நாள் விடுமுறையால் ஊரே காலியாகிடுச்சு

Aadmika
Apr 14, 2023,12:00 PM IST
சென்னை : தொடர்ந்து இரண்டாவது வாரமாக வார இறுதி நாட்களுடன் சேர்த்து விடுமுறை நாளும் வருவதால் எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் சென்னை சாலையில் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஏப்ரல் 7 ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளி விடுமுறை நாளாகும். இதோடு சேர்த்து வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தால் சென்னையில் தங்கி, வேலை செய்யும் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இருந்தால் அப்போதும் சர்ச்க்கு செல்பவர்கள் உள்ளிட்டவர்களால் சாலையில் ஓரளவு வாகன நடமாட்டம் இருந்தது. 



ஆனால் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஏப்ரல் 14 ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு என்பதால் அரசு விடுமுறையானது. இதோடு சேர்த்து சனி, ஞாயிற்றுகிழமை வருவதால் பலரும் சனிக்கிழமை அலுவலகங்களுக்கு லீவ் எடுத்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கு புத்தாண்டு கொண்டாட சென்று விட்டனர். இன்னும் சிலர் பள்ளி கோடை விடுமுறை காரணமாக வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று விட்டனர். இதனால் சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்து ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

தொடர்ந்து மூன்றாவது வாரமாக வரும் வாரத்திலும் ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமையே கொண்டாடப்படுவதாக பல இடங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது வாரத்திலும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் அலுவலகம் செல்வோர் கூட செம குஷியாகி உள்ளனர். அது மட்டுமல்ல அதற்கு அடுத்து வரும் வாரத்திலும் மே 01 ம் தேதி திங்கட்கிழமை வருவதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.