ஐ.நா. சபையில் திருவள்ளுவர் சிலை.. சுவிஸ் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு.. விஜிபி சந்தோஷம் உதவியுடன்!

Aadmika
Mar 23, 2023,01:01 PM IST

சென்னை : சென்னையில் சுவிட்சர்லாந்து தமிழ் இலக்கிய சங்க தலைவர், முனைவர். அருள்ராசா நாகேஸ்வரனை வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கம் மற்றும் வி.ஜி.பி. குழுமத் தலைவர், முனைவர். வி.ஜி.சந்தோசம் வரவேற்றும், சுவிஸ் தமிழ் இலக்கிய சங்க தலைவர், வி.ஜி.சந்தோசத்திற்கு பொன்னாடை அணிவித்தும் மரியாதை செய்தார்.

பின்னதாக, நடந்த கலந்தாலோசனையில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலையினை நிறுவ முயற்சி மேற்கொள்ளவும், வி.ஜி.பி உலகத் தமிழ்  சங்கம் சார்பாக திருவள்ளுவர் சிலையினை தந்து உதவுவதாகவும் வி.ஜி.சந்தோசம் தெரிவித்தார். இக் கலந்தாலோசனையில் நேர்முக உதவியாளர் பீட்டர், கொரிய தமிழ் சங்கத்தின் பன்னாட்டு தொடர்பாளர் தாமோதரன், ஒருங்கிணைப்பாளர் நடராசன், மகேஷ் உடனிருந்தனர்.



விஜிபி உலகத் தமிழ் சங்கம் சார்பில் உலகின் பல நாடுகளில் உள்ள முக்கிய இடங்களில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு வருகிறது. 2021 ம் ஆண்டில் மட்டும் வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையால் நடத்தப்பட்டு வரும் 60 தமிழ் அமைப்புக்களில் நிறுவுவதற்காக 60 திருவள்ளுவர் சிலைகள் விஜிபி உலகத் தமிழ் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.