45 வயதை கடந்தும் திருமணம் ஆகாதவர்களுக்கு பென்சன்.. ஹரியானா சூப்பர்!

Aadmika
Jul 08, 2023,09:47 AM IST
சண்டிகர் : 45 வயது முதல் 60 வயது வரையிலான திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் தோறும் பென்சன் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஜூலை 6 ம் தேதிக்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் 45 வயது முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2750 பென்சனாக வழங்கப்படும். 60 வயதை கடந்த பிறகு பயனாளர்கள் தானாகவே முதியோர் பென்சன் பெற தகுதி பெற்று விடுவார்கள் என்றும் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.



ரூ.1.8 லட்சத்திற்கும் குறைவான வருமானம் பெறும் திருமணம் ஆகாத 45 வயது முதல் 60 வயது வரையிலானவர்களே மாத பென்சன் பெற தகுதியானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பல காலமாக பலரின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்ததால் தற்போது அது அமல்படுத்தப்படுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருமணமாகி கணவனையோ அல்லது மனைவியையோ இழந்தவர்களும் இந்த மாத பென்சன் பெற தகுதியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

திருமணமாகாத 45 வயதை கடந்தவர்களுக்கு பென்சன் வழங்கும் திட்டம் முதல் முறையாக அரியானாவில் அமல்படுத்தப்பட்டுள்ளதால் விரைவில் மற்ற மாநிலங்களிலும் இது போன்ற திட்டங்கள் மாநில அரசால் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.