"மெளனம்" பேசுகிறதே... விஞ்ஞானிகள் ஹேப்பி நியூஸ்!

Su.tha Arivalagan
Jul 12, 2023,11:14 AM IST
டெல்லி: அமைதியின் ஒலியை யாராவது கேட்டிருக்கீங்களா.. என்னங்க இது சின்னப்புள்ளைத்தனமா பேசறீங்கன்னு நீங்க கேட்கலாம்.. ஆனால் நிஜம்தானாம்.. அமைதியின் ஒலியைக் கேட்க முடியமாம்.

ஆச்சரியமா இருக்குல்ல.. பட் உண்மைதானாம்.

கிட்டத்தட்ட 1000 பேரிடம் ஆராய்ச்சி நடத்தி இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளனராம். "ஆப்டிகல் இல்யூஷன்" கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா.. அதேபோலத்தான் "ஆடிட்டரி இல்யூஷன்" என்றும் ஒன்று உள்ளது. அதுதான் "மெளனத்தின் சத்தம்".. இதை நம்மால் கேட்க முடியுமாம்.  இதைத்தான் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.




இந்த ஆய்வை அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சைக்காலஜி மற்றும் பிலாசபி துறையினர் இணைந்து நடத்தினர். கிட்டத்தட்ட 1000 பேரை இதற்காக ஆய்வு செய்தனர். அவர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவுகளை தற்போது இக்குழு வெளியிட்டுள்ளது.

இக்குழுவில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆய்வு மாணவர்   ரூயி ஷெ கோ என்பவர் இதுகுறித்துக் கூறுகையில், நமது கேட்கும் உணர்வானது ஒலியுடன் சம்பந்தப்பட்டது. ஆனால் அமைதி என்பது சத்தம் அல்ல..  சத்தம் இல்லாத நிலைதான் அமைதி. இருப்பினும் இந்த அமைதின் ஒலியையும் நாம் உணர முடியும். இதுதான் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்பாகும் என்றார்.

மாஸ் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஸ்வர்ணலதா!

ஆடிட்டரி இல்யூஷன் மூலம் நாம் அமைதியின் சத்தத்தை உணர முடியும். கிட்டத்தட்ட வழக்கமான ஒலியைப் போலவே இதையும் கேட்க முடியும். அமைதியும் கூட ஒலிக்கு இணையானதாகவே இருக்கிறது. எனவே நம்மால் நிச்சயம் அமைதியையும் கேட்க  முடியும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

ஓஹோ.. இதனால்தான் நம்ம இயக்குநர் அமீர்.. அப்பவே.. "மெளனம் பேசியதே" அப்படின்னு படம் எடுத்தாரோ!