டாப் 5 பொருளாதார நாடுகள்... இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா ?

Aadmika
Jul 08, 2023,03:39 PM IST
டெல்லி : 5 முன்னணி பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

ஜிடிபி அடிப்படையில் உலகின் டாப் 5 பொருளாதார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டாப் 5 நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. உலகின் டாப் 5 பொருளாதார நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2வது இடத்திலும், ஜப்பான் 3வது படத்திலும், ஜெர்மனி 4வது இடத்திலும், இந்தியா 5வது இடத்திலும் உள்ளது. 

உலகின் பொருளாதார நாடுகள் பட்டிலில் 1960 முதல் தற்போது வரை அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சேவைகள், உற்பத்தி, நிதி, தொழில்நுட்பம் என முக்கிய துறைகள் அனைத்திலும் அமெரிக்காவே ஆதிக்கம் செலுத்தி வருவதாக ஃபோப்ஸ் இந்தியா குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜிடிபி வளர்ச்சி ஆண்டுக்கு 1.6 சதவீதமாக உள்ளது. 

பொருளாதாரத்தில் 1960 களில் நான்காவது இடத்தில் இருந்த சீனா, தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. உற்பத்தி, ஏற்றுமதி, முதலீடு ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் சீனா வளர்ச்சி அடைந்துள்ளது. சீனாவின் ஜிடிபி வளர்ச்சி ஆண்டுக்கு 5.2 சதவீதம் ஆக உள்ளது. 

இந்தியாவை பொருத்தவரை பொருளாதாரம் சமீப ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வருகிறது. தகவல் தொழில்நுட்பசம், சேவைகள், விவசாயம், உற்பத்தி போன்ற துறைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. மிகப் பெரிய உள்நாட்டு சந்தை கொண்ட நாடாக இந்தியா மாறி வருகிறது. இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப திறமை காரணமாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி ஆண்டுக்கு 5.9 சதவீதமாக உள்ளது.