அதிக வருமான வரி செலுத்தும் டாப் 5 மாநிலங்கள்...தமிழகம் இருக்கா இதில்?

Aadmika
Aug 18, 2023,11:57 AM IST
டில்லி : 2023 ம் நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய டாப் 5 இந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களில் இருந்து மட்டும் ஏறக்குறைய 50 சதவீதம் வருமான வரி செலுத்தப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், 2023 ம் ஆண்டில் நாட்டில் மொத்தமாக வசூலான வருமான வரித் தொகையில் 48 சதவீதம் தொகை 5 மாநிலங்களில் இருந்து மட்டும் செலுத்தப்பட்டுள்ளது. 



அதிக வருமான வரி செலுத்தும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், உத்திர பிரதேசம் 2வது இடத்திலும், குஜராத் 3வது இடத்திலும், ராஜஸ்தான் 4வது இடத்திலும், மேற்கு வங்கம் 5வது இடத்திலும் உள்ளன. 2023 ம் ஆண்டில் மொத்தமாக ரூ.64 லட்சம் இந்த 5 மாநிலங்களில் இருந்து மட்டும் வரியாக செலுத்தப்பட்டுள்ளது. அதிகமாக வரி செலுத்தும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம், தலைநகர் டில்லி உள்ளிட்டவைகள் இடம்பெறாதது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சிறிய மாநிலங்களான மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகியவை கடந்த 9 ஆண்டுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக வருமான வரி செலுத்தி உள்ளன.  இந்த புள்ளி விபரம் இந்தியாவில் நடுத்தர மக்களின் பொருளாதார நிலை உயர்ந்து வருவதையே காட்டுவதாக சொல்லப்படுகிறது. 2023 ல் 70 மில்லியன் பேர் வருமான வரி செலுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளதால், இதன் அடிப்படையில் கணக்கிட்டால் 2047 ஆம் ஆண்டு இந்தியாவில் 482 மில்லியன் பேர் வருமான வரி செலுத்துபவர்களாக இருப்பார்கள்.