அட நம்புங்க... சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 க்கு விற்பனை!

Aadmika
Jul 07, 2023,09:29 AM IST
சென்னை : காய்கறி விலை நாடு முழுவதும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக தக்காளியின் விலை கிலோ ரூ.150 வரை விற்பனையாகிறது. சென்னையிலும் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 130 க்கு விற்பனையாகிறது. இதனால் சாமானி மக்கள் கூடுதல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மக்களின் இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், சமீபத்தில் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
 


அதற்கு பிறகு தக்காளி விலை குறையும் வரை ரேஷன் கடைகளில் பாதி விலைக்கு தக்காளியை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. நேற்று முதல் சென்னையில் உள்ள 5 ரேஷன் கடைகளில் தக்காளி விலை ரூ.60 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை, மற்ற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் விற்கப்படுவதை போல் தக்காளியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி ரூ.60 க்கு கிடைக்கும் 5 கடைகள் :

1. செம்பாக்கம் டெல்லஸ் அவென்யூ ரேஷன் கடை
2. பெரம்பூர் ரேவதி சூப்பர் மார்க்கெட்
3. கோவிலம்பாக்கம் நான்மங்கலம் ரேஷன் கடை
4. மதுரவாயல், மதுரவாயல் ரேஷன் கடை
5. கீழ்பாக்கம் சிந்தாமணி ரேஷன் கடை

சென்னையில் மொத்த விலை கடைகளில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.80 முதல் 90 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோவிற்கு ரூ.40 வரை அதிகரித்து, இருமடங்காக விலை உயர்ந்துள்ளது.  சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்கப்படுகிறது.