மே 13 - இன்றைய பஞ்சாங்க பலன்
இன்று மே 13, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 30
திருநாவுக்கரசர் குருபூஜை, தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 08.22 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. இன்று காலை 08.23 துவங்கி, மே 14 காலை 06.01 வரை நவமி திதி உள்ளது. பகல் 1 மணி வரை அவிட்ட நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. பகல் 1 மணி வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
மரம் நடுவதற்கு, வேண்டுதல்கள் நிறைவேற்றுவதற்கு, வியாபார பணிகள் மேற்கொள்ள, கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
குருமார்களையும், மகான்களையும் வழிபட நன்மை உண்டாகும்.