அமெரிக்க அதிபர் போட்டியில் நுழைந்த 3 வது இந்தியர்...யார் இந்த ஹிர்ஷ்வர்தன் சிங்?

Aadmika
Jul 31, 2023,04:58 PM IST
வாஷிங்டன் : அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் 3வது இந்தியராக 38 வயதாகும் ஹிர்ஷ் வர்தன் சிங் என்பவரும் நுழைந்துள்ளார். 

தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து 2024 ம் ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய வம்சாவளியினரான நிக்கி ஹாலே மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் ஏற்கனவே அமெரிக்க அதிபர் பதவிக்கான ரேசில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், குடியரசு கட்சியை சேர்ந்தவருமான ஹிர்ஷ்வர்தனும் இணைந்துள்ளார்.



38 வயதாகும் இன்ஜினியரான ஹிர்ஷ் வர்தன், நியூஜெர்சி குடியரசு கட்சியில் சேர்ந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அதில் அவர், அமெரிக்காவின் மதிப்பை மீட்டெடுப்பதற்காக மீண்டும் மாற்றத்தை கொண்டு வருவது அவசியம். அதனால் தான் குடியரசு கட்சி சார்பில் 2024 ம் ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட நான் முடிவு செய்துள்ளேன் என தனது 3 நிமிட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

2017 முதல் 2021 ம்  ஆண்டு வரை நியூ ஜெர்சியின் கவர்னராக இருந்துள்ளார்.  2020 ம் ஆண்டே செனட் சபை உறுப்பினரான இவர் அப்போது அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படவில்லை. தற்போது அதிபர் ரேசில் நுழைந்துள்ள இவர் தன்னை Pure blood candidate என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில், அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் சுத்தம் ரத்தம் கொண்ட ஒரே நபர் நான் மட்டுமே. ஏனெனில் நான் கோவிட் தடுப்பூசிகள் ஏதும் செலுத்திக் கொள்ளவில்லை. 

தொழில்நுட்பம், மருந்து தயாரிப்பு ஆகிய இரு துறைகளிலும் நடந்து வரும் ஊழலால் அமெரிக்கா மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. அதனால் தான் நான் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளவில்லை. பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனம் அமெரிக்க அரசை கட்டாயப்படுத்தி, தாங்கள் தயாரித்த சோதனை தடுப்பூசிகளை அனைவரையும் கட்டாயம் போட்டுக்கொள்ள வைத்துள்ளது. பிக் டெக் இவர்களின் பிக் பிரதர் ஏன தெரிவித்துள்ளார்.